அரசியலில் களமிறங்கவிருந்த ரஜினிகாந்த் திடீரென அறிவித்த விடயம்!

Tuesday, 29 December 2020 - 14:07

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21
இந்திய நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை நாளை மறுநாள் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தாம் கட்சி தொடங்க போவதில்லை என இன்று அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தமது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதை அறிவிக்கும் போது தனக்கு ஏற்பட்ட வலி தனக்கு மட்டுமே தெரியும் எனவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.