வீரட் கோலியின் மனைவிக்கு பெண் குழந்தை - மகிழ்ச்சியில் கோலி...!

Monday, 11 January 2021 - 17:41

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+-+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF...%21
இந்திய கிரிக்கட் அணியின் தலைவரான வீரட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மதியம் தனது மனைவிக்கு குழந்தை பேறு நிகழ்ந்துள்ளதாக கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை மேற்கொண்டிருந்தார்.

தற்போது தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.