வவுனியாவில் 35,000 ஹெக்டர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி..!

Tuesday, 12 January 2021 - 7:36

%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+35%2C000+%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21
வவுனியா மாவட்டத்தில் இந்த முறை பெரும்போக நெல் உற்பத்தில் நடவடிக்கைகள் 35 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் செய்யப்பட்டுள்ளது.

பருவ மழை மூலம் வவுனியாவில் குளங்கள் நிரம்பியுள்ளன.

இதனை தொடர்ந்து நெல் வயல்களில் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதற்கமைவாக 35 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் இந்த முறை நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டதுடன், விவசாயிகளுக்கு தேவையான உரம் வவுனியாவில் உள்ள 12 விவசாய சேவைகள் மத்திய நிலையங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக விவசாய சேவைகள் உதவி ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.