இந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசி முகாம்...!

Tuesday, 12 January 2021 - 10:35

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D...%21
இந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் முகாம் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்குத் தேவையான தடுப்பூசிகள் இன்று புனே நகரில் உள்ள சீரம் மருந்து நிறுவனத்திலிருந்து 13 நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சீரம் மற்றும் பாரத் பயோடெக் மருந்து நிறுவனங்களிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ள தடுப்பூசிகளை இந்திய மத்திய அரசாங்கம் நேற்று கோரியிருந்தது.

இதன்படி குறித்த மருந்து நிறுவனங்களிடம் இருந்து 6 கோடி கொவிஷீல்ட் தடுப்பூசிகள் கோரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் முகாமில் முதல்கட்டமாக 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இதுதொடர்பாக மாநில முதல்வர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த சில மாதங்களில் நாட்டில் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொவிஷீல்ட் மருந்துகள் புனேயிலிருந்து விமானம் மூலம் டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, பெங்களுர், கர்னால், ஹைதராபாத், விஜயவாடா, குவஹாட்டி, லக்னோ, புவனேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

8 பயணிகள் விமானம் மூலமும், 2 சரக்கு விமானங்கள் மூலமும் இந்த மருந்துகள் அந்தந்த நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என இந்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.