9 மில்லியன் அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி...!

Tuesday, 12 January 2021 - 13:12

9+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF...%21+
இதுவரை 9 மில்லியன் அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கியுள்ளதாக சி. டி.சி எனும் அந்த நாட்டின் தொற்றுநோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு இவ்வாறு முதல் தடுப்பூசி அளவு வழங்கப்பட்டுள்ளதுடன், இது மத்திய அரசினால் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட 25 மில்லியன் தடுப்பூசி அளவுகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் ஆகும்.

மேலும் மிச்சிகன் பிரதேசத்தின் ஆளுநர் சி. டி.சி யிடம் 100,000 அளவு பைசர் - பயோடெக் தடுப்பூசியை நேரடியாக வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

தற்போது பைசர் தடுப்பூசி மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்த அமெரிக்காவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜோ பைடன் இரண்டாவது முறையாக கொரோனா தடுப்பூசியை நேற்று பெற்றுக் கொண்டார்.