ஐக்கிய அமெரிக்க ராஜ்ஜியத்தில் லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள சென் டியாகோ மிருகக்காட்சி சாலையில் சவாரி பூங்காவில் 8 கொரில்லாக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
அந்த பூங்காவில் விலங்குகளை பராமரிக்கும் ஒரு நபரிடமிருந்து கொரில்லா ஒன்றிற்கு கொரோனா தொற்றுறுதியாகிய பின்னரே இவ்வாறு ஏனைய கொரில்லாக்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இது மனிதன் மூலம் குரங்குகளுக்கு கொரோனா தொற்று பரவிய முதல் முறையாகும்.
அழிந்து போகும் அபாயத்திலுள்ள மேற்கு தாழ்நில பிரதேசங்களில் இருக்கும் விசேட கொரில்லாக்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட கொரில்லாக்களை தவிர்த்து ஏனைய கொரில்லாக்களும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளை காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.