கொரோனா தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக மலேசிய அரசாங்கம் அவசர கால நிலையை அறிவித்துள்ளது.
இதனால் நாடாளுமன்ற சந்திப்புகள் மற்றும் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
முதல்வர் முஹத்தின் யாசின் மலேசியாவின் அல்- சுல்தான்-முஸ்தப்பா பில்லா ஷா அரசரை சந்தித்த பின்னரே இந்த தகவலை அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமையை கவனத்தில் கொண்டே ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை அவசர கால நிலையை அறிவித்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
அரசர் தீர்மானிக்கும் வரை நாடாளுமன்ற சந்திப்புகள் மற்றும் அனைத்து தேர்தல்களையும் ஒத்தி வைப்பதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.