நாளை ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மூவர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் இருவர் அடங்கியுள்ளதாக நம்பப்படுகின்றது.
இங்கிலாந்து அணியில் கொரோனா தொற்றுக்குள்ளான மோஹின் அலியின் தனிமைப்படுத்தல் காலம் இன்றுடன் நிறைவடைந்தாலும், அவர் முதலாவது டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் மேலதிக பந்து வீச்சாளராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நன்மையளிக்கும் காலி புற்வெளியில் நடைபெறுவதுடன் இந்த டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து அணியின் டொம் பேஸ் மற்றும் ஜெக் லீச் ஆகியோர் விசேட சுழற்பந்து வீச்சாளர்களாக விளையாட உள்ளனர்.
ஒலீ ஸ்டோன் மற்றும் மார்க் வூட் ஆகிய இரண்டு வீரர்களில் ஒருவரும், சகல துறை ஆட்டக்காரர் சாம் கரண் மற்றும் ஸ்டூவர்ட் பிரோட் அல்லது ஜேம்ஸ் அண்டர்சன் ஆகிய இரு வீரர்களில் ஒருவரும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக விளையாடுவார்கள்.