தேங்காய்ச் சொட்டு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

Wednesday, 13 January 2021 - 8:17

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
தேங்காய்ச் சொட்டு சார்ந்த உற்பத்திகளுக்காக குளிரூட்டப்பட்ட தேங்காய்ச் சொட்டு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

தேங்காய்ச் சொட்டு சார்ந்த உற்பத்திகளுக்காக உள்ளுர் தெங்கு உற்பத்தி விநியோகம் போதுமானதாக இன்மையால், சில நிபந்தனைகளின் கீழ், தேங்காய்; சொட்டு இறக்குமதிக்காக முன்னதாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதற்கமைய 8 மாத காலப்பகுகுதியில் 2 ஆயிர்து 542 மெற்றிக்டொன் தேங்காய்ச் சொட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 250 மில்லியன் தெங்கு உற்பத்தி பற்றாக்குறை நிலவும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தொடர்ச்சியாக நான்கு மாதங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தெங்கு உற்பத்தி 400 மில்லியன்களுக்கு குறைவாக நிலவுமாயின், தேங்காய்ச் சொட்டு இறக்குமதிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.