இங்கிலாந்து அணியுடன் நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக, 22 பேர் கொண்ட இலங்கை அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழாமுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.
திமுத் கருணாரட்ன தலைமையிலான அணிக் குழாமில், குசல் ஜனித் பெரேரா, தினேஸ் சந்திமல், குஷல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்யூஸ், ஓஷத பெர்ணான்டோ, நிரோஷன் திக்வெல்ல, மினொட் பானுக, லஹிரு திரிமன்னே, லசித் எம்புல்தெனிய, வனிது அசரங்க ஆகியோரும்,
தில்ருவன் பெரேரா, சுரங்க லக்மல், லஹிரு குமார, விஷ்வா பெர்ணான்டோ, துஷ்மந்த சமீர, தசுன் சானக்க, அஸித்த பெர்ணான்டோ, ரொஷேன் சில்வா, லக்ஷான் சந்தகன், நுவான் பிரதீப், ரமேஷ் மெண்டிஸ் ஆகியோரும் இந்தக் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.