ஜனாதிபதிக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் சந்திப்பு...!

Wednesday, 13 January 2021 - 19:53

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21+
கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் குத்தகைக்கோ அல்லது விற்கப்படவோ இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ துறைமுக தொழிற்சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு விற்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்து ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டிருந்ததாகவும், அந்த ஒப்பந்தத்தில் விற்றதற்கு பின் ஜப்பானிடமிருந்து கடன் தொகையொன்றை பெற்று கட்டுமான பணிகளுக்கு தேவையான உபகரணங்களை அந்த தொகையை பயன்படுத்தி வாங்குவது போன்ற விடயங்கள் அடங்கியிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் முனையத்தின் 51% உரிமையையும், கட்டுப்பாட்டையும் தக்க வைத்துக் கொள்ள ஒரு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டதாக ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டினுள் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மூலம் நாட்டின் சுதந்திரத்திற்கு அல்லது இறையாண்மைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறித்த கோரிக்கைகளுக்கமைய இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று நடத்தப்பட்டது.

முந்தைய அரசாங்கத்தினால் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை சீன அரசாங்கத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளதாகவும், தற்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் சீனாவுடன் கலந்தாலோசித்து துறைமுகப் பகுதியின் பாதுகாப்புப் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.

பிராந்திய புவிசார் அரசியல் காரணிகள், நாட்டின் இறையாண்மை, வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் ஆய்வு செய்த பின்னர் கிழக்கு முனையத்தின் வளர்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கூறினார்.

கிழக்கு முனையத்தில் ஏற்றுமதி நடவடிக்கைகளில் இந்தியா 66% பங்களிப்பு செய்கிறதுடன், ஏற்றுமதியில் பங்களாதேஷ் 9% பங்களிப்பு செய்கின்றது.

இலங்கை அரசு 51% உரிமையையும், மீதமுள்ள 49% அதானி குழுமத்திற்கும் மற்றும் வேறு தரப்பினருக்கும் பங்காளர்களாக  இணையக் கூடிய வகையில் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.