இலங்கையில் உருமாறிய கொரோனா வைரசுடன் அடையாளம் காணப்பட்டவர் இவரா..? அதிர்ச்சியில் மக்கள்

Wednesday, 13 January 2021 - 19:38

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE..%3F+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இலங்கையில் உருமாறிய கொரோனா வைரசுடன் அடையாளம் காணப்பட்டவர், இங்கிலாந்து கிரிக்கட் அணியின் வீரர் மொயின் அலியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய புதிய கொரோனா தொற்றுறுதியான நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்டவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த ஒருவர் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் சுதத் சமரவீர இன்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாட்டுக்கு வருகை தந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மொயின் அலிக்கு மாத்திரமே கொவிட் -19 தொற்றுறுதியான நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவரது தனிமைப்படுத்தல் காலம் இன்று நிறைவடைகின்றது.

எவ்வாறாயினும் அவரது தனிமைப்படுத்தல் காலத்தை மேலும் நீடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .