நல்லாட்சி அரசாங்கமே நீதித்துறையை தமக்கு சாதகமாக பயன்படுத்தியது..!

Wednesday, 13 January 2021 - 19:46

%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81..%21
கடந்த அரசாங்கமே நீதித்துறையை தமக்கு சாதகமாக பயன்படுத்தியதாக பிள்ளையான் என அறியப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில், பிள்ளையான் என அறியப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 5 பேரை மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்து இன்று விடுதலை செய்தது.

இதனையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார்.