ஐக்கிய தேசிய கட்சிக்கான புதிய பதவி நிலைகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் உபத்தலைவராக இருந்த ரவி கருணாநாயக்கவின் பதவி பறிபோயுள்ளது.
புதிய பதவி நிலைகளை தெரிவு செய்வதற்காக இன்றையதினம் கட்சியின் மத்தியசெயற்குழு ஒன்று கூடியது.
இதன்போது, கட்சியின் புதிய தவிசாளராக வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், உப தலைவராக அகிலவிராஜ் காரியவசமும், பிரதித் தலைவராக மீண்டும் ருவான் விஜேவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் பொதுச்செயலாலளராக பாலித்த ரங்கே பண்டாரவும், பொருளாளராக ஏ.எஸ்.எம்.மிஸ்பாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடன், கடசியின் பதில் செயலாளராக செயற்பட்ட ச்சமல் செனரத், கட்சியின் பிரதம நிறைவேற்றாளராக நியமிக்கப்பட்டார்.
இதன்படி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில்விக்ரமசிங்கவே தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.
அதேநேரம், கட்சியின் சிரேஷ் உப தவிசாளர்களாக அர்ஜுன ரணதுங்க மற்றும் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தயா கமகே மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் கட்சியின் உப தவிசாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதி பொதுசெயலாளராக நாலக்க கொலொன்னேவும், சட்ட செயலாளராக நிஷ்ஷங்க நாணயக்காரவும், சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளராக சந்தித் சமரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கை மற்றும் ஆய்வு பிரிவின் பிரதானியாக பேராசியர் கருணாசேன கொடித்துவக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி நவீன் திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்ட போதும், அந்த பதவியை ஏற்பது குறித்து பின்னர் அறிவிப்பதாக அவர் மத்திய செயற்குழுவில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட 4 பேர் கலந்துக் கொண்டிருக்கவில்லை.