8 மாதங்களின் பின் சீனாவில் மற்றுமொரு கொவிட் மரணம்...!

Thursday, 14 January 2021 - 12:07

8+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D...%21
உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழுவொன்று இன்று சீனாவின் வூஹான் பகுதியை சென்றடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் உருவானமை தொடர்பில் குறித்த குழு ஆராயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 10 பேர் அடங்கிய குறித்த நிபுணர் குழுவினர், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கொரோனா வைரஸ் சீனாவில் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து பல நாடுகளிலும் கொவிட்-19 தாக்கம் அதிகரித்ததோடு 19 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணித்துள்ளனர்.

இதற்கிடையில் சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் சீனாவில் கொவிட் மரணம் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது.

அத்துடன் சீனாவில் மேலும் 138 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.