நவீன வசதிகளுடன்கூடிய பொதுப்போக்குவரத்துச் சேவையை ஆரம்பிக்கத் திட்டம்!

Thursday, 14 January 2021 - 13:21

%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21
கொழும்பு உட்பட சனநெரிசல் மிகுந்த நகர்ப்பகுதிகளில் நவீன வசதிகளுடன்கூடிய பொதுப்போக்குவரத்து சேவையை, வாகனங்களைத் தரித்து வைக்கக்கூடிய வசதிகளுடன் ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது

அதற்காக தற்போதுள்ள பேரூந்துகளை விட மேலும் சொகுசு வசதிகளுடன் கூடிய குறுந்தூரப் போக்குவரத்துக்குப் பொருத்தமான 200 பேரூந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய தேவையுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அங்கீகாரம் பெற்ற உள்ளுர் நிறுவனம் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளுர் போட்டி விலைமுறிக்கோரலைப் பின்பற்றி, புதிய 200 உயர்ரக பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.