சுலேவெசி தீவுப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 34 பேர் பலி

Friday, 15 January 2021 - 22:52

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+34+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
இந்தோனேசியாவின் சுலேவெசி தீவுப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 34 பேர் பலியாகினர்.

6 தசம் 2 ரிக்டர் அளவில் இன்று காலை அங்கு நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் மேலும் 600 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பலர் காணாமல் போயுள்ளதோடு அவர்களை தேடும் மீட்கும் பணிகள் தொடர்கின்றன.

குறித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு தகவல் தொடர்பாடல் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்த அனர்த்தத்தில் மரணித்தவர்களுக்கு அந்த நாட்டு ஜனாதிபதி தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.