பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு- தீர்ப்பு வழங்கும் முன்னரே ரஞ்சன் ராமநாயக்க நீதிபதி பத்மினி ரணவக்கவுடன் கலந்துரையாடினார்..!!

Saturday, 16 January 2021 - 9:37

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4+%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..%21%21
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார்.

இந்த உரையில் அவர் ஒரு பூனை பையில் இருந்து வெளியே வந்து மீண்டும் அந்த பையிற்குள்ளேயே சென்று ஒளிந்து கொண்டதாக குறிப்பிட்டிருப்பார்.

நாங்கள் தற்சமயம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

வேகமாக நகர்ந்து செல்லும் இன்றைய காலகட்டத்தில் யாராலும் எந்தவொரு விடயத்தையும் மறைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தவொரு காரணத்திற்காகவும் யாரும் எதனையும் மறைக்கவோ அல்லது தவறாக விளக்கமளிக்கவோ முயன்றால் ஒரு ஊடகமாக அதற்கு இடமளிக்க கூடாது என்பது எமது அடிப்படை கடமையாகும்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டமை ஒரு நியாயமான தீர்ப்பு அல்ல என்பதனை குறிப்பிட வேண்டும்.

துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டது, வழக்கு விசாரணைக்கு வந்தது, மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பதெல்லாம் விரைவாக செயற்படுத்தக்கூடிய ஒரு செயல் அல்ல.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வழக்கில் நீதித்துறையை மதிக்கும் சிலருக்கும் நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் சிலருக்கும் அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளமை இதன்போது வெளியாகியுள்ளது.

ஹரின் பெர்ணான்டோ தனது நாடாளுமன்ற உரையின் போது துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது நயவஞ்சக அரசியல் நாடகத்தின் மற்றொரு நிகழ்வு என குறிப்பிட்டிருந்தார்.

துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது 2016ம் ஆண்டு செப்டெம்பர் 8ம் திகதியாகும்.

“திருமதி பத்மினி ரணவக்க, ரஞ்சன் ராமநாயக்கவுடன் பேசியது அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பே, மன்னிக்கவும் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்பே. தீர்ப்பு வழங்குவதற்கு முன் அவர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் பேசியிருப்பாராயின் அவ்விடத்தில் ஒரு பிழை இருக்கிறது என்று குறிப்பிடலாம்” என பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கடந்த 2021 ஜனவாி 06ம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் கருத்துக்களை வேண்டுமென்றே திாிபுபடுத்திக் கூறுகிறார். அவரது பேச்சின் முன்னுரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டமையானது அவரது உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.

நீதிபதி பத்மினி ரணவக்க தீர்ப்பு வழங்குவதற்கு முன் ரஞ்சன் ராமநாயக்கவுடன் பேசியிருந்தால் அது தவறாகும் என்பதையே ஹரின் பெர்ணான்டோ இங்கு சுட்டிக்காட்ட முற்படுகின்றார். 

இதன் பின் வேறெந்த தகவல்களையும் வெளிப்படுத்தாது அப்பேச்சை அத்தோடு நிறுத்தி விட்டு பிாிதொரு விடயம் பற்றிய பேச்சை மிக சூட்சுமமான முறையில் ஆரம்பித்தார்.

துமிந்த சில்வா கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு 2016 செப்டெம்பர் 8ம் திகதி வழங்கப்பட்டது.

ஹரின் பெர்ணான்டோ சில உண்மைகளை மறைக்க முற்படுவது எமக்கு தெளிவாக புலப்படுகின்றது.

இருப்பினும் ஒரு ஊடகமாக உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டியதன் அடிப்படையில், இது குறித்த தகவலை வெளியிட நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அதாவது பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது 2016ஆம் ஆண்டும் செப்டெமபெர் மாதம் 08ஆம் திகதி ஆகும்.

ஆனால், அப்போதைய இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிபதி பத்மினி ரணவக்கவுடன் கலந்துரையாடியது 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி இரவு 9.33 மணிக்கு ஆகும்.

இதன்போது பாரத லக்ஸ்மனின் கொலை வழக்கின் தீர்ப்புக்காக முழு நாடும் காத்திருப்பதாகவும், இந்த வழக்கில் நீதிபதியாக பத்மினி ரணவக்க இருக்கின்றமை தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ரஞ்சன் ராமநாயக்க இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

ரஞ்சன் - பத்மினி (தொலைபேசி உரையாடல்)

2017.07.14 (01 நிமிடம் 20 செக்கன்கள்) நேரம் - இரவு 9.33

பத்மினி - ஹலோ...

ரஞ்சன் - மதிப்பிற்குாிய அம்மணி! இந்த நேரத்தில் அழைப்பினை மேற்கொண்டமைக்கு கோபம் கொள்ள வேண்டாம்...

பத்மினி - ஆ... ஆம்...

ரஞ்சன் - நான் ரஞ்சன் ராமநாயக்க...

பத்மினி - ஆ... ஆம்... (ரஞ்சன்) திரு. ராமநாயக்க....

ரஞ்சன் - வந்து... வந்து... உங்களுக்கு தொந்தரவோ தொியவில்லை... சற்று பேசுவதற்காக எடுத்தேன்... முடியுமா..?

பத்மினி - ஆம்... இணைந்திருங்கள் பரவாயில்லை...

ரஞ்சன் - ஆ... சாி...

பத்மினி - ஆ... சற்று பொறுங்கள்... யாரோ வருகிறார்கள்... சற்று பொறுங்கள்...
(பத்மினி வீட்டிலுள்ள ஒருவருக்கு “ரஞ்சித் யாரோ வருகிறார்கள் ரஞ்சித் பாருங்கள்”)
ஹலோ... ஆம்...

ரஞ்சன் - நான் வீட்டிலுள்ளேன்... நான் மட்டும்... நான் மட்டும்தான் உள்ளேன்... வந்து... நான் மிகவும் மதிப்புடன் கதைக்கின்றேன்... நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது உங்களின்... வந்து... நான் இன்றைய நாளிதழைப் பார்த்து விட்டுதான் கதைக்கின்றேன்... தற்போதும் தொலைக்காட்சியில் சென்றது... வந்து... அந்த வழக்குத் தீர்ப்பைப் பற்றி நீதி நிலைக்கும் என்று முழு நாடும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது... மிக்க நன்றி... வந்து... வந்து... நீதிபதிகள் குழாமில் தாங்களும் இருக்கின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது...

பத்மினி - சாி... சாி...

ரஞ்சன் - ஹ்...ஹா.. நல்லது நடக்கம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்... வந்து... வந்து...

பத்மினி - சாி... சாி...

ரஞ்சன் - கடவுள் துணை புாிவாராக... ஆ... சக்தி கிடைக்க வேண்டுமென்று கூறவே அழைப்பினை எடுத்தேன்...

இந்தக் கொஞ்சலில் ஒருவாின் கழுத்திற்கு துாக்குக் கயிறு விழுவதானால் அது ஒரு பாாிய குற்றமாகும்.