இலங்கையின் பட்டய விமானங்களை 2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம்

Saturday, 16 January 2021 - 8:24

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+2021%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
கொவிட் 19 கட்டத்தில், இலங்கையின் பட்டய விமானங்களை 2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாருடனான விமான இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடுவதற்கான இந்த சந்திப்புக்கு வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தலைமை தாங்கினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான குறிப்பிடத்தக்க பௌத்தக் கலாச்சார இணைப்பின் காரணமாக, இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான விமான இணைப்பு நீண்ட காலமாக கலந்துரையாடப்பட்டு வருவதாக இந்த சந்திப்பில் மெய்நிகர் வழியில் பங்கேற்ற மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் நலின் த சில்வா தெரிவித்தார்.