உலகின் முதல் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரைக் கண்டு பிடிப்பது சாத்தியமற்றது - உலக சுகாதார ஸ்தாபனம்

Saturday, 16 January 2021 - 10:54

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
உலகில் முதன்முதல் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரைக் கண்டு பிடிப்பது ஒருபோதும் சாத்தியப்படாது என உலக சுகாதார ஸ்தாபனம் தொிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் ஆரம்பம் தொடர்பில் கண்டறிவதற்காக சீனாவின் வூஹான்  நகருக்குச் சென்ற விசேட குழுவொன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.

முதலாவது கொரோனா கொத்தணி 2019ம் ஆண்டு டிசெம்பர் மாதம் வூஹான் நகாில் கண்டறியப்பட்டது.

கொரோனா தொற்றுக்கெதிரான தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் தற்போது 46 நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு அதில் 38 நாடுகள் உயர் வருமானமீட்டும் நாடுகளாகும்.

எதிர்வரும் 100 நாட்களுக்கு முன் உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா தொற்றுக்கெதிரான தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதைக் காண்பதே தமது எதிர்பார்ப்பாகுமென உலக சுகாதார ஸ்தாபனம் தொிவித்துள்ளது.