தனிமைப்படுத்தல் தொடர்பில் வெளியான விசேட தகவல்..!

Sunday, 17 January 2021 - 7:47

+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D..%21
இந்துருவ பிரதேசத்தின் துந்துவ கிழக்கு மற்றும் துந்துவ மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை காலி ஹபராதுவ பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

ஹபராதுவ பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இதனை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் சிலர் மேலும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிக அபாயமிக்க பகுதிகளின் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் அடங்கிய புதிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும், தனிமைப்படுத்தல் மையங்களிலும் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை அடங்கிய புதுப்பிக்கப்பட்ட பட்டியலும் வெளியாகியுள்ளது.

கடந்த 12 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 14 நாட்களில் பதிவான கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் இதுவரையில், புத்தளம் மாவட்டத்தின் மாஹாவௌ, யாழ்ப்பாண மாவட்டத்தின் காரைநகர், மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி மாந்தை கிழக்கு, ஓட்டுச்சுட்டான் மற்றும் வெலிஓயா ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எந்தவொரு நோயாளரும் அடையாளம் காணப்படவில்லை.

அத்துடன் வவுனியா மாவட்டத்தின் செட்டிக்குளம், அம்பாறை மாவட்டத்தின் பதியத்தலாவ, மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, வவுணத்தீவு, திருகோணமலை மாவட்டத்தின் வெருகல், குச்சவெளி, ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இதுவரையில் எந்தவித நோயாளரும் இனங்காணப்படவில்லை.

அநுராதபுர மாவட்டத்தின் ஹொரவ்பொத்தானை, கஹடகஸ்திஹிலிய, மஹாவிலச்சிய, புளுகஸ்வௌ, திறப்பன, மொனராகலை மாவட்டத்தின் கதிர்காமம், மடுல்ல, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஒஹேவெல ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இதுவரையில் எந்தவொரு நோயாளரும் அடையாளம் காணப்படவில்லை என அந்த தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.