தமது உறவினர் அல்லது நண்பர் என கூறி போலியான வகையில் அழைப்பினை ஏற்படுத்தி விசாரணைகளுக்கு தடையேற்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவற்துறை மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கையொன்று சகல காவல்நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறான அழுத்தங்கள் காரணமாக இடைநிறுத்தாது எவ்வித பாரபட்சமும் இன்றி காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து செல்லுமாறு அந்த சுற்றறிக்கையின் ஊடாக சகல காவல்நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஆயிரத்து 559 கிலோகிராம் மஞ்சள் தொகையுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள், பேஸ்லைன் வீதியின் தெமட்டகொடை பகுதியில் பாரவூர்தி ஒன்றில் பயணித்த போது காவற்துறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள், கண்டி - மடவளை மற்றும் வத்தளை - மாபோல பகுதியை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.