அமெரிக்காவில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை...!

Sunday, 17 January 2021 - 13:12

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88...%21
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோபைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நிலையில் அந்த நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுதம் ஏந்திய தரப்பினர் போராட்டங்களில் ஈடுபடலாம் என எச்சரிக்கைப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் அமெரிக்காவின் தலைமையகம் என்று அழைக்கப்படுகின்ற வொசிங்டன் டிசியில் உள்ள கட்டிடத்தின் மீது, ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் வெற்றிபெற்றதாக, அமெரிக்க காங்கிரஸ் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவிருந்த நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

இந்த வன்முறையை தடுப்பதற்காக அந்த நாட்டின் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் பலர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் வொசிங்டன் டிசியில் உள்ள கட்டிடத்தின் பாதுகாப்பிற்காக பெருமளவான பாதுகாப்பு தரப்பினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப்பின் பல கொள்கைகளை மாற்றியமைக்கவுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.