07 விக்கட்டுக்களுடன் 36 ஓட்டங்களுக்காக களமிறங்கும் இங்கிலாந்து அணி..!

Monday, 18 January 2021 - 9:29

07+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+36+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF..%21
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்றாகும்.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெறுவதற்கு இன்னும் 36 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்படுகின்றன.

நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது இங்கிலாந்து அணி 03 விக்கட்டுக்களை இழந்து 38 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

போட்டியில் தமது இரண்டாவது இனிங்ஸ்க்காக துடுப்பாடி வரும் அவுஸ்திரேலிய அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவில் விக்கட் இழப்பின்றி 21 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

முன்னதாக துடுப்பாடிய இந்திய அணி அதன் முதல் இனிங்ஸில் சகல வி;க்கட்டுக்களையும் இழந்து 336 ஓட்டங்களையும் அவுஸ்திரேலிய அணி அதன் முதல் இனிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 369 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.

இதற்கமைய, இந்திய அணியை விட அவுஸ்திரேலிய அணி 54 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது