கால்நடைகளுக்கு இடையில் பரவும் வைரஸ் தொடர்பிலான அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது..!

Tuesday, 19 January 2021 - 8:12

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81..%21
கால்நடைகளுக்கு இடையில் பரவலடையும் வைரஸ் தொற்று தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது.

கால்நடை வளங்கள் பண்ணை மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத்தினால் அமைச்சின் செயலாளர் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தது.

அந்த குழுவிடம், குறித்த வைரஸ் தொற்று தொடர்பில் ஆராய்வதற்கும், அத்துடன் அதனை கட்டுப்படுத்துவதற்கான யோசனைகளையும் முன்வைக்குமாறு கோரப்பட்டிருந்தன.

இந்தநிலையில், அந்த குழுவினது பூரண அறிக்கை இன்றைய தினம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு இடையில் பரவும் இந்த வைரஸ் தொற்றானது நாடளாவிய ரீதியில் இதுவரை 14 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக பெருமளவான பால் உற்பத்தியாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.