சீனாவின் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்குண்டவர்களில் 12 பேர் உயிருடன் இருப்பதாக தெரிவிப்பு...!

Tuesday, 19 January 2021 - 9:43

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+12+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
சீனாவின் தங்க சுரங்கம் ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன்னர் ஏற்பட்ட வெடி விபத்தை அடுத்து சிக்குண்டவர்களில் 12 பேர் உயிருடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் வடங்கள் ஊடாக வழங்கிய அவசர உணவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த 12 பேரும் குறிப்பு ஒன்றை அந்த வடத்தின் ஊடாக அனுப்பியுள்ளனர்.


தங்களை அடையும் பணியை நிறுத்த வேண்டாம்' என அவர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன் ஏனைய 10 பேரின் தொடர்புகள் தடைப்பட்டுள்ள நிலையில் அவர்களது நிலை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

சீனாவில் சுரங்க விபத்துகள் குறைவாக ஏற்படுகின்ற நிலையில் பாதுகாப்பற்ற செயற்பாடுகள் காரணமாக இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள தங்கச்சுரங்கம் ஒன்றில் கடந்த 10 ஆம் திகதி ஏற்பட்ட வெடி விபத்தை அடுத்து அங்கு நிலச்சரிவு பதிவாகியதோடு அங்கிருந்த 22 பேர் காணாமல் போயிருந்தனர்.

இந்தநிலையில் அவர்களில் 12 பேர் உயிருடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது,