இந்திய மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது...!

Tuesday, 19 January 2021 - 10:31

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81...%21
இந்திய மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை மீள பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் 55 நாளாகவும் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டுள்ள நிலையில், இருதரப்புக்கும் இடையிலான சந்திப்பை இன்று நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், அந்த சந்திப்பும் தற்போது பிற்போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.