இந்தியாவின் கொவிட் 19 தடுப்பூசிகள் இன்று முதல் விநியோகம்...!

Wednesday, 20 January 2021 - 9:27

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+19+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...%21
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கொவிட் 19 தடுப்பூசிகள் பூட்டான், மாலைத்தீவு, பங்களாதேஸ், நேபாளம், மியன்மார் மற்றும் சீசேல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

எனினும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்காக அந்த நாடுகளின் ஒளடத ஒழுங்குமுறையின் அனுமதியை எதிர்பார்த்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை, சுகாதார பணிப்பாளர் நாயகம், மருத்துவ நிபுணர் அசேல குணவர்தனவிடம் வினவியது.

இதற்கு பதில் வழங்கிய அவர், தேசிய ஒளடத ஒழுங்குமுறை அதிகார சபை, அது குறித்த அறிக்கையினை தயாரித்து வருவதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலணியிடம் அதற்கான அனுமதியை பெற அந்த அறிக்கை முன்வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் கொவிட் 19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் ஊடாக இந்திய அரசாங்கத்துடன் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, சர்வதேச பொது சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய தொற்று நோயால் மரணிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நம்பிக்கை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொற்றுநோயால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைத்து குடும்பங்களுடனும் தாம் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி தமது நம்பிக்கையை கடைபிடிக்க அனுமதிப்பதன் மூலம் அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் உலகளாவிய சவாலாக மாறியுள்ளது.

எவ்வாறாயினும், மற்றவர்களின் நம்பிக்கைகள் மீதான நமது இரக்கமும் மரியாதையும் இழக்கப்படக்கூடாது என்று அமெரிக்க தூதர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

1955 ஆம் ஆண்டில் இலங்கை அங்கீகாரம் அளித்த உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் 18 வது பிரிவில் கற்பித்தல், நடைமுறை, வழிபாடு மற்றும் அனுசரிப்பு மூலம் ஒவ்வொருவரும் தங்கள் மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்த உரிமை உண்டு என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.