அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு...!

Wednesday, 20 January 2021 - 9:30

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+46-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9C%E0%AF%8B+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21+
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கவுள்ளார்.

அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹெரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தெரிவானார்.

பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் காணப்படும்.

இந்தநிலையில் கடந்த 6 ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் இடம்பெற்ற வன்முறைக்கு பின்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போது டொனாலட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில்; ஈடுபடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் வொஷிங்டனில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவின் பாதுகாப்பு திட்டங்களுக்கான ஏற்பாடுகளை ரகசிய சேவை முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய வொஷிங்டன் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுவாக பதவியேற்பு விழாவின் போது வொஷிங்டனுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவர்.

2009-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா முதல்முறையாக பதவியேற்கும்போது 20 லட்சம் பேர் வருகை தந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும் கொவிட்-19 தொற்றுக்காரணமாக பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வேரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்க மக்கள் பதவியேற்பு விழாவை காண வொஷிங்டனுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என ஜோ பைடனின் குழுவினர் கோரியுள்ளனர்.

அமைதியாக நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பாரம்பரிய வழக்கமான ராணுவ தளபதி படைகளை பார்வையிடும் நிகழ்ச்சி இந்த முறையும் நடைபெறும்.

ஆனால் வழக்கமாக நடைபெறும் இராணுவ அணிவகுப்பு, இணைய அணிவகுப்பாக அமெரிக்கா முழுவதும் நடைபெறும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்டுப்பாடுகள் காணப்பட்டாலும் வழமையான நட்சத்திர விருந்தினர் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு அமெரிக்க புதிய ஜனாதிபதியின் பதவி ஏற்கும் நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது

ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜொன் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

அத்துடன் துணை ஜனாதிபதி கமலா ஹெரிசுக்கு உயர் நீதிமன்ற பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.