சுற்றுலாத் தளமாக மாறும் இரணைதீவு...!

Wednesday, 20 January 2021 - 10:01

+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81...%21
பொருளாதார வளம்மிக்க சுற்றுலாத் தளமாக இரணைதீவு பிரதேசத்தினை உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடற்றொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக நவீன தொழில்நுட்ப பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கிய கடலடடைப் பண்ணை ஸ்தாபிக்கப்படவுள்ளது.

தேசிய நீர்வாழ் உயிரினங்கள் அபிவிருத்தி அதிகார சபை, தனியார் முதலீட்டாளர்கள், இரணைத்தீவு கடலட்டை வளர்ப்போர் சங்கம் ஆகிய 3 தரப்புக்கள் இணைந்து இந்த பண்ணையை ஸ்தாபிக்கவுள்ளன.

இதற்காக சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.