எபிவக் கொரோனா வினைத்திறன் மிக்கது - ரஷ்ய நுகர்வோர் சுகாதார கண்காணிப்புக் குழு அறிவிப்பு...!

Wednesday, 20 January 2021 - 13:14

%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டாவது கொவிட்19 தடுப்பூசியான எபிவக் கொரோனா 100 வீதம் வினைத்திறன் மிக்கது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய நுகர்வோர் சுகாதார கண்காணிப்புக் குழு இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவ பரிசோதனைகளின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களின் முடிவுகளின்படி, எபிவக்கொரோனா தடுப்பூசியின் நோயெதிர்ப்பு திறன் 100 சதவீதம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபீரியாவின் வெக்டர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள எபிவக்கொரோனா தடுப்பூசியின் பரிசோதனைகள் கடந்த நவம்பர் மாதம் முதல் ரஷ்யாவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ரஷ்யாவில் முதன்முதலாக பதிவு செய்யப்பட்ட ஸ்பூட்னிக் தடுப்பூசி 92 சதவீதம் பயனுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த தடுப்பூசி ரஷ்யாவில் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டுவரும் நிலையில் அதன் விநியோகம் மந்தகதியில் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகயை துரிதப்படுத்துமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்த நாட்டின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.