தொல்பொருள் அகழ்வு பணிகள் வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்

Wednesday, 20 January 2021 - 20:22

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
முல்லைத்தீவு ஆதி சிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குமுளமுனை, தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படைக்கல்லு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும் தொல்பொருள் அகழ்வு பணிகள், வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராச்சி பணிகளில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களையும் இணைத்துக்கொள்வதற்கு அதனுடன் தொடர்புடைய அமைச்சர் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல்கலைகழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களை இந்த பணிகளில் இணைத்துக்கொள்ளும் இணக்கப்பாடானது செயற்பாட்டு ரீதியாக அமைய வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கால்நடைக்கு ஒதுக்கப்பட்ட மேச்சல் தரை காணியை பெரும்பான்மையின மக்கள் அத்துமீறி அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பட்டிப்பளை பிரதேசத்தில் இருந்து பேரணியாக பிரதேச செயலகம் வரை சென்றதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை 135 கிராம சேவகர் பிரிவில் உள்ள பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான மணல்ஏற்றம், காத்தாடியார்சேனை, பொன்னாங்கண்ணிசேனை, பனையடிவெட்டை, மலையடிவெட்டவிச்சுகுளம் ஆகிய வன பிரதேச கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரையை பண்ணையாளர்கள் தொன்றுத் தொட்டு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சில வருடங்களாக பெரும்பான்மையின மக்கள் அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபட்டுவருவதுடன், 1500 ஏக்கருக்கு அதிகமான காடுகளை அழித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்