மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணிப் பதிவகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா

Wednesday, 20 January 2021 - 21:26

%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணிப் பதிவகத்தின் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுதியான நிலையில் காணிப்பதிவகத்தின் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

காணிப்பதிவகத்தில் பணிபுரியும் பணியாளர் ஒருவர் இன்று அலுவலகத்தில் வருகை வந்த வேளை விபத்திற்குள்ளானார்.

பின்னர் அவர் களுவாஞ்சிக்குடி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் எண்டிஜன் பரிசோதனையின் போதே தொற்றுறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட காணிப்பதிவகத்தில் பணியாற்றுகின்ற அனைத்து உத்தியோகத்தர்களும் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.