பேரறிவாளனின் விடுதலை குறித்த தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் - இந்திய மத்திய அரசாங்கம் அறிவிப்பு ...!

Thursday, 21 January 2021 - 19:42

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+...%21
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநரே 3 அல்லது 4 நாட்களில் தீர்மானிப்பார் என உயர் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனை விடுதலை செய்யும் விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் இந்திய குடியரசுத் தலைவருக்கே உள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று அந்த நிலைப்பாட்டை இந்திய மத்திய அரசாங்கம் மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடியரசுத் தலைவருக்கு பதிலாக மாநில ஆளுநரே 3 அல்லது 4 நாள்களில் தீர்மானிப்பார் என இந்திய மத்திய அரசாங்கம் சார்பில் முன்னிலையான தலைமை சட்டத்தரணி துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களின் கருணை மனுவில் முடிவு எடுப்பதில் 11 ஆண்டுகளாக தாமதம் செய்ததாகக் கூறி, பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தண்டனையை 2014 ஆம் ஆண்டு இந்திய உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

பின்னர் 2018 ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு விடயத்தில்; வெளிநாட்டுத் சதி ஏதும் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக மத்திய புலனாய்வுத் துறையால் அமைக்கப்பட்ட பல்நோக்கு ஒழுங்கு கண்காணிப்பு முகாமையின் விசாரணை முடிவடையும் வரை தனது ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, கடந்த வருடம்; பேரறிவாளன் தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

விடுதலை கோரி தமிழக ஆளுநருக்கு 2015 ஆம் ஆண்டு அனுப்பிய மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்னும் தமிழக அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, நீதிமன்றமே இந்த விடயத்தில்; முடிவு எடுத்து விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆயம், இந்த விடயத்தில் தமிழக ஆளுநர் இரு ஆண்டுகளாக ஏன் முடிவெடுக்கவில்லை என கேள்வி எழுப்பியது.

இந்தநிலையில் பேரறிவாளனை விடுதலை செய்யும் விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் இந்திய குடியரசுத் தலைவருக்கே உள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று அறிவித்திருந்தது.

எனினும் இந்தநிலைப்பாட்டை இந்திய மத்திய அரசாங்கம் இன்று மாற்றிக்கொண்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி தமிழக ஆளுநரே இது குறித்த இறுதி முடிவை எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.