இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று

Friday, 22 January 2021 - 9:10

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

காலி மைதானத்தில் இந்த போட்டியானது முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டியின் ஊடாக இலங்கை அணியின் சகலதுறை வீரரான ரமேஸ் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கட்டில் அறிமுகமாவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தினேஸ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணியில் குஷல் ஜனித் பெரேரா, லஹிரு திருமான்னே, ஓசத பெர்ணாண்டோ, அஞ்சலோ மெத்திவ், நிரோசன் டிக்வெல்ல, ரமேஸ்மெண்டிஸ், தில்ருவன் பெரேரா, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, ஹசித பெர்ணாண்டோ ஆகியோர் இந்த போட்டியில் விளையாடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றிக்கொண்டதன் மூலம் 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.