டொனால்ட் ட்ரம்பின் தகுதி நீக்கத் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது...!

Saturday, 23 January 2021 - 12:36

%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81...%21

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் மீதான தகுதி நீக்கத் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

செனட் சபையில் அது தொடர்பில் நடுநிலையுடன் விசாரணை நடத்தப்படும் என அந்த சபையின் பெரும்பான்மைத் தலைவர் சக் ஸ்கியுமர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியினால் டிரம்ப் மீது கொண்டு வரப்பட்ட தகுதிநீக்கத் தீர்மானத்தை செனட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் முடிவுகளில் மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைக்கு டிரம்ப் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தநிலையில்,  இரண்டு முறை தகுதி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.