கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஹிக்கடுவை சிகிச்சை மையத்தில்...!

Saturday, 23 January 2021 - 13:53

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...%21
கொவிட்-19 தொற்றுறுதியான சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஹிக்கடுவ சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை சுகாதார அமைச்சு இன்று நண்பகல் உறுதிப்படுத்தியது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையின் போது கொவிட்-19 தொற்றுறுதியானமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவர் இறுதியாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர மருத்துவமனையில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேநேரம் நேற்று முன்தினம் நெலும் மாவத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பங்கேற்றிருந்தமை குறிப்பிடதக்கது.