இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

Sunday, 24 January 2021 - 7:11

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 2 விக்கட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 381 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மெத்திவ்ஸ் 110 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 92 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் என்டர்சன் 6 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.