முன்னணி போதை பொருள் வர்த்தகரான ஷே ஷீ லூப் வுளந ஊhi டுழி நெதர்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்ரேலியா காவல்துறையினரால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறையினராலும் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தலைமையிலான குழுவினால் ஆசியா முழுவதும் 70 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போதைப்பொருள் சந்தையை ஆக்கிரமித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் சீனாவில் பிறந்த கனேடிய பிரஜையாவார்.
கனடாவுக்கு பயணிக்கவிருந்த நிலையில் தெநர்லாந்து விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஆசியாவில் தேடப்படும் முன்னணி போதைப்பொருள் வர்த்தகர்களில் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கடந்த வருடங்களில் ஹொங்கொங் மற்றும் தாய்வான் போன்ற பகுதிகளில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் போதைப்பொருள் குற்றச்சாட்டில் அவருக்கு 1990 ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.