மேல்மாகாண பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுப்பு...!

Sunday, 24 January 2021 - 11:09

+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக சிசு செரிய பேருந்து சேவையை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்படின் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தயாராகவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.