ஹோமாகம பிரதேசத்தில் புதிதாக திருமணமான தம்பதிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி...!

Sunday, 24 January 2021 - 16:52

%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF...%21
ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற இரு திருமண வைபவங்களின், திருமண தம்பதிகளுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம பிரதேசத்தின் பொது சுகாதார ஆய்வாளர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார்

ஒரு திருமணத்திற்கு அவர்கள் மூன்று வைபவங்களை நடத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அதில் இரண்டு வைபவங்களுக்கு அனுமதி பெற்றுள்ளதுடன், வட்டரெக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு அனுமதி பெற்றிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த தம்பதியினர் நுவரெலியாவிலுள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றுள்ளதுடன், அங்கு அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அப்போது அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதனால் அவர்களின் மூன்று திருமண வைபவங்களுக்கும் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம பிரதேசத்தின் பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட மற்ற தம்பதியினர் தங்கள் திருமண வைபவத்தை ஹோமகாமாவில் உள்ள ஒரு பிரதேச சபை மண்டபத்தில் நடத்தியுள்ளதுடன், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாப்பிள்ளை தரப்பினரில் 12 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

விசேட நிகழ்வுகளுக்காக அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி நிகழ்வுகளை நடத்துமாறு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.