கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விசேட ஆய்வு..!

Sunday, 24 January 2021 - 19:22

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81..%21
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதில் இருந்து குணமடைந்தவர்களுக்கு, அந்த வைரசுக்கு எதிராக செயற்படுகின்ற எதிர்ப்புடல், ஆறு மாதங்கள் வரையில் தொடர்ந்தும் நீடிக்கும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ரொக்கஃபெல்லர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உருவாகின்ற எதிர்ப்புடல், பரினாம வளர்ச்சி அடைகின்ற நிலைமைகளும் உள்ளன.

இதன்படி குறித்த எதிர்ப்புடல் மூலம், தென்னாப்பிரக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளில் பரவி வருகின்ற திரிபடைந்த கொரோனா வைரஸையும் எதிர்க்கும் திறன் உருவாகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதேவேளை,கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களிடம் இருந்து மற்றையவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக, இங்கிலாந்தின் உதவி வைத்திய பிரதானி பேராசிரியர் ஜொனத்தன் வென் டேம் தெரிவித்துள்ளார்.

எனவே தடுப்பூசியை ஏற்றுக்கொண்டவர்களும் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தடுப்பூசிகள் மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விடயத்தில் ஏற்படும் விளைவு சம்மந்தமான தெளிவான பெறுபேறு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.