தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்..!

Monday, 25 January 2021 - 8:19

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
இன்று காலை 6 மணிமுதல் கல்முனை வடக்கு மற்றும் தெற்கு கிராம சேவகர் பிரிவுகளில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி, கல்முனை வடக்கு கிராம சேவகர் பிரிவில் கல்முனை 1ஊ, கல்முனை 1நு, கல்முனை 2, கல்முனை 2யு, கல்முனை 2டீ, கல்முனை 3யு முதலான பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கல்முனை தெற்கு கிராம சேவகர் பிரிவில் கல்முனை 01 முஸ்லிம் பிரிவுஇ கல்முனைக்குடி 01, கல்முனைக்குடி 02, கல்முனை 03 முஸ்லிம் பிரிவு ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம், இன்று காலை 6 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 140 - போலான தெற்கு கிராம சேவகர் பிரிவின் மெல்கொனிய கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பூஜாப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பல்லியகோட்டை மற்றும் கல்ஹின்ன கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.