பைஸர் மற்றும் பையோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலியாவுக்கு அனுமதி!

Monday, 25 January 2021 - 13:55

%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%21+
அவுஸ்திரேலியாவில் பைஸர் மற்றும் பையோன்டெக் Pfizer-BioNTech கொவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய மருத்துவ ஒழுங்குபடுத்துநர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதற்கமைய, முதற்கட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதிப் பகுதியளவில் வழங்கப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸகொட் மொறிசன் Scott Morrison இன்று அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கோவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 34 ஆயிரத்து 740 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்றைய தினம் 642 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 17 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 7 மரணங்கள் பதிவான நிலையில், தமிழகத்தில் பதிவான கொவிட்-19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 316 ஆக உயர்வடைந்துள்ளது.

4 ஆயிரத்து 904 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.