ஓய்வூதியதாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனை செய்வதற்கு உத்தரவு...!

Monday, 25 January 2021 - 14:33

%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81...%21
தமக்கு ஒதுக்கப்படுகின்ற ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பை கைவிடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறு கோரி 95 ஓய்வூதிய பெறுநர்கள் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 14 ஆம் திகதி பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ஜூன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகியோர் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்ட போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டின் இறுதி வரையிலான காலப்பகுதியில் ஓய்வூதிய பெற்ற ஓய்வூதிய பெறுநர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பை அரசாங்கம் கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளமையினால் தமக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.