இந்திய – சீனா எல்லைப் பகுதியில் இரண்டு நாடுகளின் படையினருக்கும் இடையில் மோதல்கள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சிக்கிம் பிராந்தியத்தில் கடந்த 20ம் திகதி இந்த மோதல் பதிவான போதும், தற்போதே அது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
சீனாவின் கண்காணிப்பு வாகனம் ஒன்றில் சீனப்படையினர் இந்திய எல்லைக்குள் பிரவேசிக்க முயற்சித்த போது, இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரண்டு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அங்கிருந்த படைத்தளபதிகளால் இந்த பிரச்சினை சமரசம் செய்யப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.