சீனாவின் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்குண்டவர்களில் 11 பேர் மீட்பு...!

Monday, 25 January 2021 - 16:57

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+11+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
சீனாவின் ஷன்டொங் மாகாணத்திலுள்ள தங்க சுரங்கமொன்றில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து அவற்றில் சிக்கியவர்களில் 9 பேரின் சடலங்கள் இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சுரங்கத்தில் சிக்குண்டவர்களில் நேற்றைய தினம் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதோடு அவர்களில் சிலர் காயமடைந்திருந்தனர்.

அந்த சுரங்கத்தில் கடந்த 10 ஆம் திகதி ஏற்பட்ட வெடி விபத்தை அடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் மேலும் 9 சுரங்க பணியாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பற்ற செயற்பாடுகள் காரணமாக இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதாக சீன பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த பகுதியின் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.