மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் கொவிட் 19 பரிசோதனை...!

Tuesday, 26 January 2021 - 16:41

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+19+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88...%21+
எதிர்வரும் விடுமுறை தினங்களில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மேல் மாகாணத்தின் மாவட்டங்களில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வோருக்கு கட்டாய கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுகின்றவர்களுக்கு 11 இடங்களில் ரெபிட் என்டிஜன் சோதனை நடத்தப்பட்டதைப் போன்று, இந்தமுறை எந்த வாகனத்தில் பயணிப்பவராக இருந்தாலும், அனைவருக்கும் கொவிட் 19 சோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த மாதம் 28ம் திகதியில் இருந்து பெப்ரவரி 1 வரையில் இந்த சோதனை நடத்தப்படும் என்று காவற்துறை ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார்.