இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா தொற்று...!

Tuesday, 26 January 2021 - 17:46

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81...%21
சில வெளிநாடுகளில் முன்னதாக அடையாளம் காணப்பட்ட அதிக வீரியம்கொண்ட திரிபடைந்த புதிய கொரோனா தொற்று  இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் களங்கள் உயிரியல் நிறுவக இயக்குநர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் புதிய வகை தொற்று ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த தொற்று , பிரித்தானியா, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி முதலான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

உடனடியாக பரவல்கூடிய தன்மை இந்த தொற்றுக்கு உள்ளது.

இதேநேரம், மொனக்லோன் லென்டிபொடி என்பதில் இந்த தொற்றை அடையாளம் காணமுடியாத நிலையும் இருக்கக்கூடும்.

வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரின் மாதிரியில் இருந்துதான் இந்த தொற்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவசியமான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, இது தொடர்பில் அதிக அச்சம் கொள்ள அவசியமில்லை.

தடுப்பூசியால் உருவாகும் எதிர்ப்புடலை மீறி இந்த தொற்று செயற்படாது என வைத்தியர் சமிந்த ஜீவந்தர தெரிவித்துள்ளார்.