நாளை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்...!

Tuesday, 26 January 2021 - 21:12

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து சில பிரதேசங்கள் விடுவிக்கப்படுகின்றது.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட அட்டலுகம பிரதேசத்தின் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன. அவை பின்வருமாறு:

659 ஈ போகாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு, 659 சி பம்முனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, 657 ஏ கொலமெதிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, 659 பி கொரவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு, 660 அட்டலுகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 659 ஈ அட்டலுகம மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 660 ஏ எப்பிட்டமுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவு, 659 டி கல்கெமண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பனவாகும்.

அத்துடன் இரத்தினபுரி மாகாணத்தில் ஹெலியகொட பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மொரகளை கிராம உத்தியோகத்தர் பிரிவும் நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றது.